மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் கோயிலில் அருகே உள்ள சிறப்பு வாயில் வழியாக உள்ள வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஜூன் மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை(இன்று) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட் பெற்றவர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், வருகிற 1ம் தேதி முதல் காலை 10 மணிக்கு மாற்றாக மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்காக ரூ.300 மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்களுக்காக அறைகள் முன்பதிவு நாளை(இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: