அறந்தாங்கி அருகே வீட்டில் கிளப் வைத்து சூதாடிய பஞ். தலைவர் உட்பட 15 பேர் கைது-ரூ.7 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர் குளம் மாணிக்கம் குடியிருப்பில் உள்ள அடைக்கலம் என்பவரின் வீட்டில் சூதாட்ட கிளப் நடப்பதாக நாகுடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு பிரிவு எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை அடைக்கலம் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் அங்கு சூதாட்ட கிளப் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மணமேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி தலைவர் சாகுல் ஹமீது(63), வீட்டின் உரிமையாளர் அடைக்கலம்(60), அரசர்குளம் சேக் இஸ்மாயில்(45), ஜெய்னுல் அன்சாரி(40), ரவீஸ்(42), நைனா முகமது(45), மகாதீர் முகமது(38), அறந்தாங்கி செந்தில்வேல்(44), புதுகை பிஆர் பட்டினம் கமால் பாட்ஷா(61), காரக்கோட்டை பழனிவேல்(47), சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நிஜாமுதீன்(35), தஞ்சை மாவட்டம் திருவோணம் விக்னேஷ்(39), தஞ்சை மாவட்டம் மந்திரிபட்டினத்தை சேர்ந்த காளிதாஸ்(33), தஞ்சை மாவட்டம் வெங்கரையை சேர்ந்த வெங்கடேசன்(42), கட்டுமாவடி அன்வர்தீன்(36) ஆகிய 15 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.7 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: