கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது

திருவள்ளூர்: திருமழிசையை சேர்ந்தவர் மணிகண்டன், பாப்பன்சத்திரத்தில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது உட்கோட்டை பகுதியை சேர்ந்த அஜித், மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ₹1000த்தை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகாரளித்தார். அதன்படி பூந்தமல்லி போலீஸ் துணை ஆணையர் முத்துப்பாண்டியன் உத்தரவின்பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து உட்கோட்டை பகுதியை சேர்ந்த அஜித்(29) என்பவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். ஏற்கனவே அஜீத் மீது 4 வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: