விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது

நாமக்கல்: விதவையை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை, பணத்தை வழிப்பறி செய்து தப்பியோடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அழகுநகரை சேர்ந்த 30 வயது விதவை பெண்ணும், அவரது ஆண் நண்பரும் நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லை அடுத்த வீசானம் ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களிடம் வீசானத்தை சேர்ந்த பெயிண்டர் முரளி என்பவர், ஒரு ஆணும், பெண்ணும் ஏரிக்கரையில் தனியாக பேசிக்கொண்டிருப்பதை கூறியுள்ளார். இதையடுத்து பைக்கில் வந்த 3 பேரில் ஒருவர், அந்த பெண்ணின் நண்பரை பிடித்து வைத்துக்கொண்டார்.

பின்னர், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று, 3 பேரும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், ரூ2 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டனர். மேலும். அவருடன் வந்த நண்பரிடம், கூகுள்பே மூலம் ரூ3 ஆயிரத்தை மிரட்டி பறித்துக் கொண்டனர். பின்னர், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த பெண், இதுபற்றி நேற்று நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதை வைத்து, குற்றவாளியின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த, நாமக்கல் அழகுநகரை சேர்ந்த நவீன்குமார், (22), வீசானத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21), இதற்கு உடந்தையாக இருந்த வீசானத்தை சேர்ந்த பெயிண்டர் முரளி (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் பலாத்காரம் செய்த வீசானத்தை சேர்ந்த வல்லரசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். விதவை பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர், நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று, 3 பேரும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.

Related Stories: