அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது

கம்பம்: அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அகத்தியர் தீவு அருகே வந்த இரு மீன்பிடி படகுகளை சோதனை செய்தனர். அந்த படகுகளில் 220 கிலோ ஹெராயின் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த இரு படகுகளில் இருந்த கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 20 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஹெராயின் எங்கிருந்து எங்கு கடத்தப்பட்டது என்பது குறித்து இவர்களிடம் கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: