திருப்புவனம் வைகை ஆற்றில் பைரவர் சிலை கண்டெடுப்பு

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் திதி திடலுக்கு அருகே பைரவர் சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் திதி கொடுக்க வருபவர்கள் எள், சர்க்கரை, பழம் ஆகியவற்றை ஆற்றில் கரைப்பது அல்லது பள்ளம் தோண்டி புதைப்பது வழக்கம். நேற்று ஒருவர் திதி கொடுத்த பொருட்களை புதைக்க பள்ளம் தோண்டினார். அப்போது ஒரு சிலையின் மேற்பகுதி தென்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் சேர்ந்து தோண்டி எடுத்தனர். அங்கு நாய் வாகனத்துடன் கூடிய பைரவர் சிலை இருந்தது. சிலையை எடுத்த இடத்திலேயே வைத்துள்ளனர்.

Related Stories: