தாழக்குடி- பீமநகரி சாலையில் அத்துமீறும் டாரஸ் லாரிகள்

நாகர்கோவில்: தாழக்குடி- பீமநகரி சாலையில் அத்துமீறும் டாரஸ் லாரிகளால் சாலைகள் பழுதாகி, விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி வழியாக கேரளாவிற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் கேரளாவிற்கு விதிமுறைகளை மீறி அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்கின்றன. இதில் பல லாரிகள் இறச்சக்குளம், வீரநாராயணமங்கலம் பீமநகரி வழியாக நாக்கால் மடம் விலக்கு வழியாக செல்கின்றன. ‘

தாழக்குடி- பீமநகரி சாலையில் ஒரு புறம் குளமும், மறுபுறம் வயல்வெளிகளும் காணப்படுகின்றன. இதனால், இந்த சாலையில் குறிப்பிட்ட பாரத்திற்கு மேல் வேகமாக டாரஸ் லாரிகள் செல்வதால், சாலைகள் பழுதடைந்து குளம் வயலில் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழக்குடி அருகே திருப்பத்தில் கனரக லாரி பழுதாகி ஒரு நாள் முழுவதும் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் திணறின. குறுகிய சாலைகளில் வேகமாக வரும் இந்த டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே இச்சாலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் லோடு ஏற்றி இருக்க கனரக லாரிகள் செல்ல முடியாதபடி இரும்பு கம்பிகள் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: