தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்பட்டியை  ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார். இந்த ரயில் பாட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை.

இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதன் பின் பேசிய அமைச்சர், ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும், தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: