பெங்களூருவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல்: சிறுவன் உள்பட 6 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனிப்படை போலீசார் நகர் முழுவதும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தீவிர வாகனை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீனிவாசபுரம் அகழி பாலம் அருகே வந்த காரை சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைத்து சோதனை ெசய்தனர். இதில், காரில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காரிலிருந்த 6 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த முகமது பாரூக்(35), பன்னீர்செல்வம்(40), பக்கிராம்(48), திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சோசாராம்(41), பெங்களூரை சேர்ந்த பிரவின்குமார்(21), பீகாரை சேர்ந்த 17வயது சிறுவன் என்பதும், பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வந்து தஞ்சாவூர் கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 3 டன் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: