துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு

திருமலை: ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தெலுங்கு திரைப்பட கவிஞர் சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் நூல் வெளியீட்டு விழா இன்று ஷில்பகலா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பங்கேற்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை இயக்குனரும் டிஎஸ்பியுமான குமார் அம்மிரேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, உளவுத்துறை டிஎஸ்பி குமார் அம்மிரேஷ் மேடையில் இருந்து திடீரென கால்தவறி பள்ளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 போலீஸ்காரர்கள் மர்ம சாவு: கேரள  மாநிலம், பாலக்காடு அருகே முட்டிக்குளங்கரை என்ற இடத்தில் கேரள போலீஸ்  ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த மோகன்தாஸ், அசோகன் என்ற 2 போலீஸ்காரர்களை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. அவர்கள் முகாமுக்கு அருகே உள்ள  வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 2 பேரும் மின்சாரம் தாக்கி  இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அதற்கான எந்த  தடயங்களும் அங்கு இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்

Related Stories: