எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு பாஸ்கர ராமன் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: