ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்கள் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பதற்கோ அதன் நிர்வாகக் குழுவே முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் வழங்க அனுமதி தரப்பட்டது. தற்போதைய விதிகளின்படி, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழு அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், அவற்றை கையகப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே அதிகாரம் உண்டு.

பங்குகள் விற்பனை, துணை நிறுவனங்களை மூட அதிகாரம் இல்லை. தற்போது ஒன்றிய அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, பங்குகளை விற்க பொதுத்துறை நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம். இதன் மூலம் முடிவெடுக்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் பெரிய அளவிலான நோக்கத்தையும் அடைய முடியும் என ஒன்றிய அரசு உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: