ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

ஜமைக்கா: ஜமைக்கா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - ஜமைக்கா இடையிலான உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்ட உறவை  வலுப்படுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பதால், அவருக்கு ஜமைக்காவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

கிங்ஸ்டனில் அம்பேத்கரின் பெயரிடப்பட்ட சாலையை திறந்து வைத்தார். மற்றொரு நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, ஜமைக்கா மக்களுக்கு வழங்கப்பட்டது குறித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் பேசினார். தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் உள்ளிட்ட தலைவர்களை இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசவுள்ளார். அதன்பின் தனது நான்கு நாட்கள் ஜமைக்கா பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியா திரும்புகிறார். ஜமைக்காவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: