வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை ஒருங்கிணைத்து உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம். இதில் பயன்பெற 8ம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவராகவும் இருப்பது அவசியம். கடனுதவி பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது. தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிகுழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோரும் பயன் பெறலாம். பொது பிரிவினர் நகர் புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவிதம் மானியமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினர் நகர்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த ஆண்டில் 285 பேருக்கு கடனுதவியும், இதற்காக மானிய தொகையாக ரூ.8.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கடன் உதவி பெற விரும்புவோர் இணையதள முகவரி www.kviconline.gov.in/pmegpeportalல் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழில் பேட்டை, காக்களுர், திருவள்ளூர் - 602003 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: