காலாப்பட்டு: உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் குதிரை ஜெர்சி (86). கடந்த 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழி துறையில் ரஷ்ய மொழி பயிற்றுநராக பணியாற்றியுள்ளார். மேலும் அவர் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தங்கி இருந்தாராம். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரு சென்ற குதிரை ஜெர்சி, புதுச்சேரி திரும்பியுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதையடுத்து அவர் ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
