ஜம்மு - காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பொதுமக்களில் ஒருவர் பலி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவரும் உயிரிழந்தார். இந்த மோதலில் ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜி விஜய் குமார் கூறுகையில், ‘சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியை சுற்றிவளைத்த போது, ​​மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டி, பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டபோது, ​​மறைந்திருந்த தீவிரவாதிகள் தப்பிக்க முயன்றனர். அப்போது அவர்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர். துரு பகுதியில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என்றார்.

Related Stories: