மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் 27 வயதான துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர், 28 வயதான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் முதல்செட்டை 7-0 என ஜபீர் கைப்பற்றினார். 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா 6-0 என வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். 3வது செட்டில் அதிரடி காட்டிய ஜபீர் 6-2 என கைப்பற்றினார். 1 மணி 54 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில்முடிவில் 7-5, 0-6, 6-2 என ஜபீர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.