கூட்டு பாலியல் பலாத்காரம் அதிர்ச்சி தகவல் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்படம் ஆதாரம் கேட்ட ஐஐடி நிர்வாகம்

* தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவரிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

* தன்னை போல் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கதறினார்

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். அதோடு தன்னுடைய நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி தொடர் கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் வேறு வழியின்றி கடந்த 2021 மார்ச் 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திற்கும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் மாணவி புகார் அளித்தார். பாலியல் புகார் என்பதால் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகாரின் படி ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடி மாற்றி உத்தரவிடப்பட்டது.  

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்தால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹெல்டர் நேற்று முன்தினம் சென்னை ஐஐடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹெல்டர் குழுவை, பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்த ஆய்வகத்திற்கு அழைத்து சென்று காட்டினார். அப்போது ஒரு ஞாயிறு அன்று தன்னை ஆய்வக வழிகாட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அப்போது நான் விடுபட முயன்ற போது, தள்ளிவிட்டு தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து நான் ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, அதற்கு அவர்கள் தன்னிடம் ஆதாரங்கள் கேட்டனர். உன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஒரு புகைப்படம் கூட உன்னிடம் இல்லையா என்று கேட்டனர். பாலியல் பலாத்காரம் செய்யும் போது யாராவது புகைப்படம் எடுப்பார்களா. காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றும் கண்ணீர் மல்க கதறியபடி கூறினார்.

நான் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு என்னை ஐஐடி நிர்வாகம் தன்னை கொடுமைப்படுத்தினர். நீயே ஒரு குப்பை, ஐஐடியை விட்டு வெளியேறு... என்று கட்டாயப்படுத்தினர். நான் முனைவர் பட்டத்திற்காக ஐஐடியில் சமர்ப்பித்த கட்டுரைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த கட்டுரைகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என்னை போல் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அமைதி காத்து வருவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவரிடம் கூறி கதறினார்.

பிறகு வேதியியல் ஆய்வகத்திற்கு அழைத்து ெசன்று இங்கு தனக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து கண்ணீர் மல்க கூறினார். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹெல்டர்  மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியதை கேட்டு ஒரு நிமிடம் கண்கலங்கினார். அபபோது பாதிக்கப்பட்ட மாணவியிடம் ‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் கூறினார். பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சம்பவ இடத்திற்கே நேரில் அழைத்து சென்று பாதிக்கப்பட்ட மாணவி கூறி கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: