புதுடெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. இதில், கட்டிட மேஸ்திரி, பெயின்டர், வெல்டர், தச்சு வேலை செய்பவர்கள், கிரேன் ஆபரேட்டர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம், டெல்லி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்டுமான தொழிலாளர்கள் சிலருக்கு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இலவச பஸ் பாஸ்களை வழங்கி பேசியதாவது:
முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.