ம.பி.-யில் பசுவை கொன்றதாகக் கூறி பழங்குடியினர் இருவர் அடித்துக் கொலை!: 20 பேர் மீது வழக்குப்பதிந்தது காவல்துறை..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பசுவை கொன்றதாக கூறி பழங்குடியினர் இருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சியோனி மாவட்டத்தில் உள்ள சமாரியா என்ற இடத்தில், பழங்குடியினர் வாழும் பகுதியில் ஒரு வீட்டில் நுழைந்த 20 பேர் கொண்ட கும்பல் 2 பேரை கண்மூடித்தனமாக தாக்கியது. பசுவை கொன்றதாகக் குற்றம்சாட்டிய கும்பல், வீட்டில் இருந்த 3 பேரை வெளியில் இழுத்து வந்து அடித்து உதைத்தது. இதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களே படுகொலைகளை அரங்கேற்றி இருப்பதாக மத்தியப்பிரதேச காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அடையாளம் தெரிந்த 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

Related Stories: