லிவர்பூல்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன் லீக் கால்பந்து போட்டி அரையிறுதிக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், வில்லார்ரியல் அணிகள் தகுதிப்பெற்றன. தலா 2 சுற்றுகளாக அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த அரையிறுதி முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் மான்செஸ்டர் சிட்டி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து லிவர்பூலில் நேற்று நடந்த முதல் சுற்றின் 2வது ஆட்டத்தில் லிவர்பூல்-வில்லார்ரியல் அணிகள் களம் கண்டன. லிவர்பூல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆனாலும் முதல் பாதி முடிவில் ஆட்டம் சமனில் இருந்தது.