திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5.29 லட்சம் பக்தர்கள் ஒரு வாரத்தில் தரிசனம்: ரூ.32.49 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒரு வாரத்தில் 5.29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ₹32.49 கோடி காணிக்கை செலுத்தினர். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டி  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு முன்பே தொடர் விடுமுறை காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனத்துக்கு 7 முதல் 8 மணி நேரம் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில்  காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து பால், காலை சிற்றுண்டி, மதியம், இரவு உணவு வழங்கப்படுகிறது.  

பக்தர்களுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை பெற  400 சவர தொழிலாளர்கள் இருந்த நிலையில்  ​​​​தற்போது 1,200 ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் அறைகளை  காலி செய்யப்பட்ட 20 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டு வேறு பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் 17 வரை ஏழுமலையானை  5 லட்சத்து 29 ஆயிரத்து 926 பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் உண்டியலில் ₹32 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். 24 லட்சத்து 36 ஆயிரத்து 744 லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோடை விடுமுறைக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: