கூடலூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பாகற்காய்களை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

கூடலூர் :  கூடலூரை அடுத்த முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பாகற்காய்க்கு வியாபாரிகள் உரிய விலை தராமலும் பறிக்கப்பட்ட பாகற்காய்களை தோட்டத்திலேயே விட்டு விட்டு சென்றதாலும் ஆத்திரம் அடைந்து அவற்றை கூடலூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக கொட்டி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

விவசாயிகள் கூறுகையில், கேரளாவில் பாகற்காய் கிலோ 38 ரூபாய் வரை விற்கும் நிலையில் கூடலூர் விவசாயிகளிடம் ரூபாய் 20 என அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.

அரசு இப்பகுதியில் உற்பத்தியாகும் விவசாய பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கூடலூர் ஆர்டிஓ தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிகளை அழைத்து பேசினர். பேச்சுவார்த்தையை  அடுத்து வியாபாரிகள் விவசாயிகளிடம் தோட்டத்தில் தோட்டத்தில் பறித்த பாகற்காய்களை கொள்முதல் செய்து கொள்வதாக உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: