ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்களில் சோதனை 10 ஏர் ஹாரன்கள் பறிமுதல்-போக்குவரத்து ஆய்வாளர் அதிரடி

ராசிபுரம் : ராசிபுரம் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் தினசரி, 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் விதி மீறி காற்று ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எழுப்பபடும் ஓசையால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடும் சிரமத்தற்குள்ளாகி வந்தனர். இது குறித்த செய்தி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, ராசிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கவிதா, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தியது கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்.

பின்னர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கவிதா, ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களை அழைத்து கூறியதாவது:

நீண்ட தொலைவு செல்லும் பஸ்களில் ஏர்ஹாரன்களை அதிகளவு பயன்படுத்துவதால், காற்றின் அழுத்தம் குறைகிறது. இதனால் பஸ் வேகமாக செல்லும் போது, அவசர காலங்களில் பிரேக் பிடிக்கும் போது, ஏர் பிரேக் சரியாக நிற்காமல் பெரிதளவில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. டிரைவர்களின் அலட்சிய போக்கு பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும். தொடர்ந்து இதுபோல் ஏர்ஹாரன் பயன்படுத்தினால், டிரைவர்களுக்கு ₹10அபராதம் விதிக்கப்படும். எனவே, இந்த நடவடிக் கைகள் தொடரும் என்றார். இந்த ஆய்வின் போது, ராசிபுரம் போக்குவரத்து துணை ஆய்வாளர் குணசிங் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: