நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்

*பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் தென்னை விவசாயிகள்

க.பரமத்தி : க.பரமத்தி பகுதியில் வறட்சியால் நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால், பலன் கொடுத்த தென்னை மரங்களை பராமரிக்க முடியாமல் வெட்டி அழிப்பதுடன் அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார் வழி, காருடையம்பாளை யம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந் தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.

இதன் குக்கிராமங்களில் மழை மற்றும் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் வரும் நீரால் இப்குதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் சமன் செய்யப்பட்டு, ஆண்டு முழுவதும் ஓரளவு கிணற்று பாசனத்தை நம்பி வாழை, சூரியகாந்தி, பருத்தி, சோளம், கம்பு போன்ற பணப் பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக போதுமான மழை, இல்லாததாலும் அவ்வப்போது அமராவதி ஆற்றில் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுத்து விடப்பட்டு அதுவும் ஒரிரு நாள்களில் நிறுத்தப்பட்ட நிலையால் நிலத்தடி நீரும் பாதிப்பு ஏற்பட்டது.

வற்றாமல் , இருந்த பல கிணறுகளும் வறண்டதால், விவசாய நிலங்கள் காயந்தன. ஏராளமான ஏக்கர் பாசன நிலங்கள், மழை பெய்தால் மட்டுமே பயன்பெறும் மானாவாரி நிலங்களாகி விட்டன.நிலத்தடி நீரை நம்பி இருந்த தென்னந்தோப்புகள் பலவும், காயந்ததால் அவற்றை வெட்டி அழிக்க மனமில்லாமல் அதற்குரிய வெட்டுக் கூலி கூட வழங்க முடியாமல் பலரும் திணறுகின்றனர். விவசாயிகள் பலரும், மாற்றுதொழிலுக்கும், பிழைப்பு தேடி வெளியூர்களுக்கும் செல்லும் நிலை தற்போது விவசாயிகள் மத்தியில் உள்ளதாக விவசாயிகள் பலரும் புலம்பி வருகின்றனர்.

வறட்சியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:வற்றாத கிணறு கொண்ட நிலங்கள் கூட தற்போது வறண்டு விட்டன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை விவசாயம் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு பலன் கொடுத்ததால் தென்னை மரங்களை பராமரித்து வந்தோம். தற்போது போதிய மழை , இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், தற்போது பாதிப்பு ஏற்பட்டது. தென்னை மரங்களை காப்பாற்ற, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் பலன், இல்லை. நிலத்தடி நீராதாரம், இல்லை. பல ஆண்டுகளாக பராமரித்த தென்னை மரங்களை வளர்க்க முடியாமல் உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

The post நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: