விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை சிறையில் இருந்த ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரை, 7 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2 தினங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை ஹரிஹரன், ஜூனத் அகமது இருவரையும், பெத்தனாட்சி நகரில் 20.8.2021 முதல் 18.3.2022 வரை பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ள மெடிக்கல் குடோனுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார் அழைத்து சென்றனர்.
