தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி, மராட்டி, குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ் சேர்க்கப்படாமல் இருந்தது. மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ் மொாழி சேதர்க்கப்படாததற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த கோவின் இணையம் மற்றும் செயலியில் தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் செயல்பட்டு வந்தன. அதன்பின்னர் கடந்த 4-ம் தேதி பிற மாநில மொழிகளும் கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்ட்டன. மேலும் 9 மொழிகளாக மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகள் இடம்பெற்றன. ஆனால், அதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவின் இணையதள பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
இதையடுத்து, ஆங்கிலம், இந்தி தவிர எஞ்சிய மொழிகளை கோவின் செயலியில் இருந்து நீக்கிய மத்திய அரசு 2 நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தது.  கோவின் இணையதளத்தில் மொத்தம் 12 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆங்கிலம், தமிழ், மலையாலம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, பெங்காலி, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன.  தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற செயலியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

The post தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: