ஆம் ஆத்மி சார்பில் மனுதாக்கல் மாநிலங்களவை தேர்தல் ஹர்பஜன் சிங் போட்டி

புதுடெல்லி: மாநிலங்களவையில் 13 எம்பிக்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் மாதம் முடிவடைகின்றது. பஞ்சாப் 5 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைகின்றது, கேரளா 3, அசாம் 2, இமாச்சலப்பிரதேசம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் காலியாக உள்ள தலா ஒரு எம்பி பதவி காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனைமுன்னிட்டு வருகின்ற 31ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியானது 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி எம்எல்ஏ ராகவ் சந்திரா, டெல்லி ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக் கல்வியாளர்கள் அசோக் மிட்டால் மற்றும் சஞ்சீவ் அரோரா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஹர்பஜன் உள்ளிட்ட அனைவரும் முதல்வர் பகவந்த் மான் உடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Stories: