மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்

மும்பை: மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபரில் நேற்று முன்தினம் பெய்த கனமழை மற்றும் புழுதிப் புயலால் பிரமாண்ட விளம்பர பலகை கீழே விழுந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். 74 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் பிரமாண்ட விளம்பர பலகையை தயாரித்த ஈகோ மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் பாவேஷ் பிண்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் உட்பட 24 வழக்குகள் உள்ளன. தற்போது தலைமறைவாக இருக்கும் பாவேஷ் பிண்டே மீது இந்தாண்டு ஜனவரியில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2009ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முலுண்ட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: