ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி வென்ற லக்‌ஷயா சென்னுக்கு மோடி, சச்சின் பாராட்டு

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி  பர்மிங்காமில் நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் தரவரிசையில்  11வது இடத்தில் உள்ள இந்தியாவின் 20 வயதான லக்‌ஷயா சென், நம்பர் 1 வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான டென்மார்க்கின் 28 வயது விக்டர் ஆக்சல்செனுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விக்டர் ஆக்சல்சென், 10-21 15-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். லக்‌ஷயா சென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

அவருக்கு பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறும்போது, \”உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் லக்‌ஷயா சென்! நீங்கள் குறிப்பிடத்தக்க துணிச்சலையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். வெற்றிக்காக சுறுசுறுப்பாக போராடினீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் வெற்றியின் புதிய உயரங்களைத் தொடர்வீர்கள் என்று நான் நம்புகிறேன், என பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில், “வாழ்க்கையில் தோல்விகள் இல்லை.

நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது கற்றுக் கொள்ளுங்கள். இந்த அற்புதமான அனுபவத்திலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இனிவரும் போட்டிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள், என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: