மேகதாது அணையை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார்: அன்புமணி பேட்டி

மேட்டூர்: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க, எந்த தியாகமும் செய்ய தயார் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்ட பணிகள், மேட்டூர் அருகே திப்பம்பட்டியில் நடக்கிறது. இதனை பாமக இளைஞர் அணி செயலாளரும், எம்பியுமான அன்புமணி,நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு கடந்த வாரம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அறிவித்தது. இது கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால்,தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. எனவே, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க நானும், என்னோடு உள்ள கோடிக்கணக்கான தம்பி, தங்கைகளும், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் ஷெகாவத், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தவறான போக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: