தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் தூவிப் போற்றுதல் நிகழ்ச்சி நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் தூவிப் போற்றுதல் நிகழ்ச்சி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகிய நீதி நூல்களைத் தந்தவர் தமிழ் மூதாட்டி ஔவையார். பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 8.3.2022 ஆம் நாளன்று காலை 10.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால் சென்னை மெரினா கடற்கரை - காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவிப் போற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் / பணியாளர்கள், தமிழ் அறிஞர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: