பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்

சிவகங்கை : கல்லல் அருகே பாகனேரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.திமுக பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாநில இலக்கிய அணித் தலைவர் தென்னவன் மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாலை, துண்டு அணிவித்து கவுரவித்து அழைத்து வரப்பட்டனர்.

போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 16 மாடுகளும், 144 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். வெற்றிபெற்ற அணியினருக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லல் தெற்கு ஒன்றிய நெடுஞ்செழியன், சிவகங்கை ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதிபிரபாகரன், காரைக்குடி நகர் செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துத்துரை, மும்பை மாநில திமுக அமைப்பாளர் சேசுராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், சுப.தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிளை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Related Stories: