நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் காணொலி மூலம் `ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை முகாம்

நெல்லை: மாரடைப்பு நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த ஒளியியல் ஒருங்கிணைப்பு டெமோகிராபி (ஐஓசிடி) என்ற நவீன கருவியை பயன்படுத்துவது தொடர்பாக செயல்முறை பயிற்சி முகாம் நெல்லை ஷிபா மருத்துவமனையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் அமெரிக்காவை சேர்ந்த இருதய மருத்துவர்கள் டாக்டர் நில்ஸ் ஜான்சன், டாக்டர் யாதர் சன்டோவால், நெல்லை ஷிபா மருத்துவமனையின் இருதய மருத்துவர்கள் டாக்டர் கிரிஷ் தீபக், டாக்டர் செல்வகுமரன், டாக்டர் கணேசன், டாக்டர் செல்வமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

காணொலி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட இருதய மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்கேஎம் முகம்மது ஷாபி கூறுகையில், தென் தமிழகத்தில் ஐஓசிடி மூலம் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நேரலையாக காணொலி காட்சி மூலம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும் என குறிப்பிட்டார்.

Related Stories: