நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுக்கு ஒத்த ஓட்டு : பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட வேட்பாளருக்கு சோகம்!!

சென்னை : தமிழ்நாட்டில் பாஜக நோட்டோவுக்கு கீழ் தான் வாக்குகளை வாங்க முடியும் என்று தொடர்ச்சியான விமர்சனம் இருந்துவரும் நிலையில், தற்போது புதிதாக ஓத்த ஒட்டு பாஜக என்ற விமர்சனமும் சேர்ந்துள்ளது. கடந்த 19ம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவே கைப்பற்றுகிறது. தமிழ்நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களும், தோல்வி ஒப்பாரிக்ளும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஈரோடு நிகழ்ந்த சம்பவமோ தமிழ்நாடு முழுவதும் உள்ள பாஜக-வினரை கதிகலங்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். பாஜக இவ்வாறு ஒத்த ஓட்டு வாங்குவது இதுவே முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார் என்பது நினைகூறத்தக்கது.

Related Stories: