12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘கார்பிவேக்ஸ்’ தடுப்பூசி: மருந்து ஆணைய நிபுணர் குழு அனுமதி

புதுடெல்லி: பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் ‘கார்பிவேக்ஸ்’ தடுப்பூசியை 12 முதல் 18 வயது  வரையிலானவர்களுக்கு அவசரகால பயன்பாட்டு பயன்படுத்த மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி எனும் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜைகோவ்-டி மருந்து 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் ‘கார்பிவேக்ஸ்’ தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்தது.

இந்த தடுப்பூசி, புரோட்டின் ஆன்டிஜென் முறையில் அதாவது கொரோனா  வைரஸில் உள்ள ஸ்பைக் புரோட்டின் அமைப்பை எடுத்துத் தயாரிக்கப்பட்ட  தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசியை உடலில் செலுத்துவதன் மூலம் கொரோனா  வைரஸை எதிர்க்கும் புரோட்டீன்களை அதிக அளவில் செல்கள் பிரதி எடுத்து  உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிட்டு நோய்த்  தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு, பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் ‘கார்பிவேக்ஸ்’ தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு அவசரகால பயன்பாட்டு பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.

Related Stories: