தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று கன்னியாகுமரி, தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி , கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: