சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ் ஆந்திரா முதல்வருடன் சந்திப்பு

அமராவதி:  சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ் உள்பட தெலுங்கு திரையுலகினர், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.ஆந்திராவில் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா, ராதே ஷியாம், பீம்லா நாயக், சர்க்காரு வாரி பட்டா, எஃப் 3 உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருகின்றன.

 இதையொட்டி நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், இயக்குனர்கள் ராஜமவுலி, கொரட்டாலா சிவா உள்ளிட்டோர் ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் நேற்று சென்றனர். பின்னர் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும், இதற்காக தனி கமிட்டி போட வேண்டும், சிறு பட்ஜெட் படங்களுக்கு 5 காட்சிகள் நடத்த அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதாக திரையுலகினரிடம் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

Related Stories: