மேற்கு வங்கத்தை போல் உபி.யிலும் வீழ்த்த முடியும்: சமாஜ்வாடியை ஆதரித்து மம்தா பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சமாஜ்வாடி, பாஜ இடையிலான இருமுனைப் போட்டியில் அகிலேஷ் யாதவ் வரலாற்று வெற்றி பெறுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலில் சமாஜ்வாடி, பாஜ இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.

இத்தேர்தலில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக உபி. வந்துள்ள அவர்ல அகிலேசுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அகிலேசும், மம்தாவும் லக்னோவில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, `கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே இருமுனைப் போட்டி நிலவியது. அப்போது `ஆட்டம் ஆரம்பம்’ என்ற பிரசார பாடல் திரிணாமுல் சார்பில் ஒலிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் பாஜ.வை வீழ்த்த முடியும் என்ற போது உத்தர பிரதேசத்திலும் அது முடியும். இங்கு சமாஜ்வாடி, பாஜ இடையிலான இருமுனைப் போட்டியில் பாஜ.வை வீழ்த்த முடியும். இதில் அகிலேஷ் வெற்றி பெறுவார். அது வரலாற்று வெற்றியாக அமையும்,’ என்று மம்தா கூறினார்.

Related Stories: