நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ்பெல் நாட்அவுட்டாக 56, அலெக்ஸ் ஹார்டன் 53, ஜார்ஜ் தாமஸ் 50 ரன் எடுத்தனர். பின்னர் களம்இறங்கிய ஆப்கானிஸ்தான் 47ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களே எடுத்தது.