கோயில் அர்ச்சகர் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை: திருவள்ளூர் அருகே துணிகரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம், பாக்குபேட்டை ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார் (32). அதே பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார். இவரது மனைவி பிரித்திகா (27), மகள் நிக்கிதா (4). நேற்று காலையில் வழக்கம் போல பூஜை முடிந்த பின் வீட்டுக்கு வந்தார் கிரண்குமார். பின்னர் சாப்பிட்டு விட்டு மனைவி, மகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை சேகரை பார்க்க கிரண்குமார் புறப்பட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். முன்பக்க கதவை திறக்க முயன்றபோது, உள்புறமாக பூட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்தார்.

பின்புறம் சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த மோதிரம், கம்மல், செயின் என 2 பவுன் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.3500 ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. உடனே மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: