உள்ளாடை குறித்த சர்ச்சை பேச்சு நடிகை மீது நடவடிக்கை ம.பி. அமைச்சர் உத்தரவு

போபால்: உள்ளாடை அளவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை சுவேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ம.பி. அமைச்சர் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலிவுட் நடிகை சுவேதா திவாரி, வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி போபாலில் நடந்தது.  அப்போது இந்த வெப்சீரிசில் தனது கேரக்டர் பற்றி சுவேதா திவாரி பேசிக்கொண்டிருந்தபோது, பெண்களின் உள்ளாடை மற்றும் கடவுளை ஒப்பிட்டு சரச்சைக்குரிய வகையில் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா திவாரி மீது சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, 24 மணி நேரத்தில் சுவேதா திவாரி பேசியது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: