குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் குவிப்பு; எஸ்பி வருண்குமார் தகவல்

திருவள்ளூர்: போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்ட அறிக்கை: இன்று (26ம் தேதி) நாட்டின் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 58 முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் முக்கிய தொழில் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் ஊர்க்காவல் படையினர் உட்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர மாவட்ட விளையாட்டு திடலில் கலெக்டர் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதால் அங்கு 2 போலீஸ் டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: