கால்நடைகள் அதிகமானதால் நாட்டில் தண்ணீர் பஞ்சம்: மத்திய அமைச்சர் வேதனை

புதுடெல்லி: ‘இந்தியாவில் மனிதர்கள், கால்நடைகளின் தொகை பெருகிவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதியன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்  கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ‘சர்வதேச நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு’ என்ற நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.  இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: சர்வதேச மக்கள் தொகையிலும், கால்நடைகளின் அளவிலும் 18 சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. இதனாலும் தனிநபரின் தண்ணீர் தேவை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் மட்டும் 85 சதவிகிதம் தண்ணீரை செலவழிக்கிறோம். மக்கள் தொகையும், கால்நடைகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டதால்தான் இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். …

The post கால்நடைகள் அதிகமானதால் நாட்டில் தண்ணீர் பஞ்சம்: மத்திய அமைச்சர் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: