வீடு, கடையை உடைத்து கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கடந்த சில நாட்களுக்கு முன் மணிகண்டன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின்  கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் முத்துசுந்தரம் (36). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, அங்கிருந்த விலை உயர்ந்த 11 செல்போன்களை, மர்மபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: