நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன்.

நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. சுதந்திர இந்தியா - ஆசாத் ஹிந்த் - என்ற தனது கடுமையான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: