ஊத்துக்கோட்டை வட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிட பணி பெண் நீதிபதி நேரில் ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் கடந்த 3.11.2007ம் ஆண்டு உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டு 22 வருடங்களாக தனியாருக்கு சொந்தமான  வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஊத்துக்கோட்டை நீதிமன்றத்திற்கு சொந்தமான அரசு கட்டிடம் வேண்டும் என ஊத்துக்கோட்டை வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் புதிய நீதிமன்றத்கான இடத்தையும், லச்சிவாக்கம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் உள்ள இடத்தையும் நேற்று ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா(பொறுப்பு) பார்வையிட்டார்.

இதில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன், துணை வட்டாட்சியர் நடராஜன், அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் வெஸ்லி, வழக்கறிஞர்  சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், துணைத் தலைவர் சாமுவேல், துணை செயலாளர் பிரகாஷ், மற்றும் வழக்கறிஞர்கள் ராஜசேகரன், முனுசாமி, பொன்னுசாமி, குமார், சாந்தகுமார், சதீஷ் வாசுதேவன், தில்லைகுமார் ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.அப்போது, வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் பின்புறம் புதிய நீதிமன்றத்திற்காக புதிதாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும். அதை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத லச்சிவாக்கம் பெரம்பூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டாம், என கோரிக்கை வைத்தனர்.

Related Stories: