குடியரசு தின நிகழ்ச்சியில் காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் மீண்டும் நீக்கம்: ஒன்றிய அரசு சர்ச்சை

புதுடெல்லி: காந்திக்கு விருப்பமான ‘அபைட் வித் மீ’ என்ற பாடலை குடியரசு தின இசை பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் கோலாகலமாக நடைபெறும் குடியரசு தின விழாவில் ராணுவத்தின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். பின்னர், 3வது நாளில் இப்படை பிரிவுகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி 29ம் தேதி நடக்கும். ஜனாதிபதி மாளிகை அருகே இது நடக்கும்.  அப்போது, முப்படைகளையும் சேர்ந்த இசைக்குழு, மகாத்மா காந்திக்கு விருப்பான, ‘அபைட் வித் மீ’ என்ற பாடலையும் இசைக்கும்.

ஆனால், இந்தாண்டு நிகழ்ச்சியில் இருந்து இந்த பாடல் நீக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 2020ம் ஆண்டும் இந்த பாடல் இடம் பெறவில்லை. அதற்கு, எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு விழாவில் இப்பாடல் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: