விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தரமாக இருக்க வேண்டும்-ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம், கொத்தமங்கலம், கல்பட்டு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிகமான மற்றும் நேரடியான நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளின் முன்னேற்றம், தரம் குறித்து பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, காணை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியலின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதன்தொடர்பான விவரங்களை வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.16.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலைநீர்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டு, விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வி.கொத்தமங்கலத்தில் ஊரகவளர்ச்சித்துறை மூலும் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியையும், தேசிய ஊரகவேலைவாய்ப்புதிட்டத்தின்கீழ் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி திறப்பதற்கு முன்பு அனைத்து பணிகளையும் தரமாகவும், குறித்தகாலகெடுவிற்குள் பணியை முடித்திட ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவாக்கூர் முதல் கல்பட்டு வரையிலான பிரதமமந்திரி கிராம சாைல மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.16.22 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள கனஅளவில் மேற்கொள்ளவேண்டும். ஒப்பந்தகால வரையிலான சாலை பராமரிப்பு பணியை, ஒப்பந்ததாரர் செய்யவேண்டும். கிராமப்புற வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார்.

Related Stories: