முல்லை பெரியாருக்கு எதிராக அறிவியல்பூர்வமான ஆதாரம் உள்ளதா? உச்ச நீதிமன்றம் விசாரிக்க மனு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான பிரதான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 10ம் தேதி இது விசாரணைக்கு வந்தபோது, அணை பாதுகாப்பு விவகாரத்தில் எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது ஒன்றாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கும், வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை சீனியர் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று எதன் அடிப்படையில் கேட்கிறார்கள், அதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? அதேப்போன்று அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் கீழ் பகுதி மக்கள் பாதிப்படைகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஆதாரம் என்ன? அனைத்து விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: